Pages

Sunday, August 29, 2010

Aiyooooooo. Makka eppadilam yosikkiranga................


மல்லாக்க படுத்துகிட்டு யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது



யப்பா !  தாங்கலியே










இப்படியும் ஒரு சங்கமா ! படியுங்க ஆனா ...........................


                 செருப்பு இல்லாம நாம நடக்கலாம்
                 ஆனா,
                 நாம இல்லாம செருப்பு நடக்க முடியாது.


                 - தீவிரமாக யோசிப்போர் சங்கம் (எங்களுக்கு வேறு
எங்கும் கிளைகள் கிடையாது)


                 என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு
எல்லாம் இருந்தாலும்,
                 ரயிலேறனும்னா,
                ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.


                 பஸ் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா பஸ்ஸு வரும்.
                 ஆனா,
                 ஃபுல் ஸ்டாப் கிட்ட வெய்ட் பண்ணா ஃபுல்லு வருமா?
                 நல்லா யோசிங்க! குவாட்டர் கூட வராது!!!
                 என்னதான் பொண்ணுங்க பைக் ஓட்டினாலும்,
                 ஹீரோ ஹோன்டா, ஹீரோயின் ஹோன்டா ஆய்டாது!!
                 அதேமாதிரி,
                 என்னதான் பசங்க வெண்டைக்காய் சாப்பிட்டாலும்,
                 லேடீஸ் ஃபிங்கர், ஜென்ட்ஸ் ஃபிங்கர் ஆய்டாது!!!
                 டிசம்பர் 31க்கும்,
                 ஜனவரி 1க்கும்
                 ஒரு நாள்தான் வித்தியாசம்.
                 ஆனால்,
                 ஜனவரி 1க்கும்,
                 டிசம்பர் 31க்கும்,
                 ஒரு வருசம் வித்தியாசம்.
                 இதுதான் உலகம்.


                 பஸ் ஸ்டாண்ட்ல பஸ் நிக்கும்.
                 ஆட்டோ ஸ்டாண்ட்ல ஆட்டோ நிக்கும்.
                 சைக்கிள் ஸ்டாண்ட்ல சைக்கிள் நிக்கும்.
                 ஆனா...
                 கொசுவத்தி ஸ்டாண்ட்ல கொசு நிக்குமா??
                 யோசிக்கனும்...!!
                 தத்துவம் 1:


                 இஞ்ஜினியரிங் காலேஜ்ல படிச்சா இஞ்ஜினியர் ஆகலாம்.
                 ஆனா
                 பிரசிடன்சி காலேஜ்ல படிச்சா பிரசிடன்ட் ஆக முடியுமா?
                 தத்துவம் 2:


                 ஆட்டோக்கு 'ஆட்டோ'ன்னு பேர் இருந்தாலும்,
                 மேன்யுவலாத்தான் டிரைவ் பண்ண முடியும்.
                 தத்துவம் 3:


                 தூக்க மருந்து சாப்பிட்டா தூக்கம் வரும்,
                 ஆனா
                 இருமல் மருந்து சாப்பிட்டா இருமல் வராது!
                 (என்ன கொடுமை சார் இது!?!)
                 தத்துவம் 4:


                 வாழை மரம் தார் போடும்,
                 ஆனா
                 அதை வச்சு ரோடு போட முடியாது!
                 (ஹலோ! ஹலோ!!!!)
                 தத்துவம் 5:


                 பல்வலி வந்தால் பல்லை புடுங்கலாம்,
                 ஆனா கால்வலி வந்தால் காலை புடுங்க முடியுமா?
                 இல்லை தலைவலி வந்தால் தலையைதான் புடுங்க முடியுமா?
                 (டேய்! எங்க இருந்துடா கிளம்புறீங்க?!)
                 தத்துவம் 6:


                 லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்...
                 சன்டே அன்னைக்கு சண்டை போட முடியும்,
                 அதுக்காக,
                 மன்டே அன்னைக்கு மண்டைய போட முடியுமா?
                 (ஐயோ! ஐயோ!! ஐயோ!!! காப்பாத்துங்க!!!)


                 பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,
                 கழித்தல் கணக்கு போடும்போது,
                 கடன் வாங்கித்தான் ஆகனும்.
                                  - ராவெல்லாம் முழ்ச்சு கெடந்து
யோசிப்போர் சங்கம்


                 கொலுசு போட்டா சத்தம் வரும்.
                 ஆனா,
                 சத்தம் போட்ட கொலுசு வருமா?


                 பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
                 ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
                 இதுதான் உலகம்
                 T Nagar போனா டீ வாங்கலாம்.
                 ஆனால்
                 விருது நகர் போனா விருது வாங்க முடியுமா?


                 என்னதான் பெரிய
                 வீரனா இருந்தாலும்,
                 வெயில் அடிச்சா,
                 திருப்பி அடிக்க முடியாது.


                 இளநீர்லயும் தண்ணி இருக்கு,
                 பூமிலயும் தண்ணி இருக்கு.
                 அதுக்காக,
                 இளநீர்ல போர் போடவும் முடியாது,
                 பூமில ஸ்ட்ரா போட்டு உரியவும் முடியாது.


                 உங்கள் உடம்பில்
                 கோடிக்கணக்கான செல்கள் இருந்தாலும்,
                 ஒரு செல்லில் கூட
                 ஸிம் கார்ட் போட்டு பேச முடியாது.


                 ஓடுற எலி வாலை புடிச்சா
                 நீ 'கிங்'கு
                 ஆனா...
                 தூங்குற புலி வாலை மிதிச்சா
                 உனக்கு சங்கு.
                 நிக்கிற பஸ்ஸுக்கு முன்னாடி ஓடலாம்
                 ஆனா
                 ஒடுற பஸ்ஸுக்கு முன்னாடி நிக்க முடியாது.
                 வண்டி இல்லாமல் டயர் ஓடும்.
                 ஆனால்...
                 டயர் இல்லாமல் வண்டி ஓடுமா?
                 இது மல்லாக்க படுத்துகிட்டு யோசிக்க வேண்டிய விஷயம்.
                 சைக்கிள் ஓட்டுறது சைக்கிளிங்னா, ட்ரெய்ன் ஓட்டுறது
ட்ரெய்னிங்கா? இல்ல
                 பிளேன் ஓட்டுறது பிளானிங்கா?
                 என்னதான் நீ புது மாடல் மொபைல் வச்சிருந்தாலும்
                 மெஸேஜ் Forwardதான் பண்ண முடியும்,
                 Rewindலாம் பண்ண முடியாது.

Wednesday, August 25, 2010

Thozhiyin Kavidhai

காதல் என்பது என்ன? 
யாரேனும் எனக்கு உரைக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை தரும்  விளக்கம் 
என்னவென்பது எனக்கும் தெரியும்....

காதல் என்றால் கல்யாணம் செய்து கொள்வதாம் 
என் பக்கத்து வீட்டு  குட்டி பாப்பா சொல்கிறாள் 
அவள் வயதோ ஆறு

காதல் என்று சொன்னால் சிலர் கோபிக்கிறார்கள் 
சிலர் சினுங்குகிரார்கள் ....சிலர் சொக்கி நிற்கிறார்கள்....
இன்னும் சிலர் "ஹும் " என்கிறார்கள்....
ஆனால் யாரும் அதன் அர்த்தத்தை சொன்ன பாடில்லை...

காதல் என்றால் அன்பு - அன்பு மட்டுமே....
நம் அன்னை நம் மீது வைப்பது காதல்...
அவள் தன் குழந்தையிடம் காட்டுவது அன்பென்றால்..
அதுவும் காதலே...

பெற்றவள் நம் மீது வைக்கும் காதல் 
ஆயுள் முழுவதும் நீண்டிருக்க... உயிரோடு இருக்க..
ஏன் சில காதல்  இடையில்  இறந்து போகின்றன? 

ஏனென்றால் அங்கே காதல் இல்லை...
கவர்ச்சி, பிடிவாதம், ஆசை, மட்டுமே இருக்கின்றன 
இவற்றுள் ஏதேனும் ஒன்று போனாலும் மொத்த காதலும் போய்விடுகிறது!!!!!
ஒருவர் மீது அன்பு வைப்பது அத்தனை சுலபமான விஷயம் 
அல்ல ......................

நான் ஆசை படுவதை நீ செயல் படுத்தினால் - பதிலுக்கு
நான் உன் மீது காட்டுவது அன்பல்ல....

நான் ஆசை படுவதை நீ செய்யா விட்டாலும் அப்போதும் 
நான் உன் மீது காட்டுவது தான் அன்பு....
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு...
இறைவன் நம் மீது வைக்கின்ற அன்பு...

உன்னை , உன் குறைகளை (குறை என்று நீ நினைப்பவற்றை ) 
அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை ஆராதிக்க 
ஓர் உயிர் இருந்துவிட்டால் உலகில் அந்த மனிதனை விட 
பாக்கியசாலி வேறு ஒருவரும் இல்லை....

"நீ நீயாகவே இருக்கலாம்...உன் மனசாட்சி படி 
நடக்கலாம் ....அது எனக்கு எதிராகவே இருந்தாலும்
உன் மீது நான் கொண்டிருக்கும் அன்பு மாறாது..."
இப்படி ஓர் அன்பு மனம் அது தாயாகவோ , தந்தையாகவோ 
சகோதரனாகவோ கணவனாகவோ இருக்கலாமே...

இதுவே தூய்மையான  அன்பு....உன்னிடம் 
எதையும் எதிர்பார்க்காத அன்பு ....பேரம் பேசாத அன்பு...
உயிர்களின் துன்பம் களையும் அன்பு ....

இந்த அன்பை நான் பிறரிடம் காட்ட  எனக்கு
அருள் செய்வாய் இறைவா....

Thursday, August 19, 2010

Oru Kavithai ( Try Panni Parthirukken)

கண்களை  மூடினால்
கலைஞரின் ஆட்சியில்
கனவுகளும் இலவசம்

Monday, August 16, 2010

New Era in blogspot

ஒரு வேகத்துல bolgspot ஆரம்பிச்சுட்டேன் . இப்போ இதுல என்ன எழுதுறதுன்னு தெரியல. இருந்தாலும் தெரிஞ்சவங்க  அறிஞ்சவங்க கிட்ட தகவல் வாங்கி தொடர்ந்து எழுதனும்னு நினைச்சிருக்கேன். முதல்ல orkut தோழிகிட்ட இது சம்பந்தமா ஐடியா கேட்டேன் . கொய்யல்லன்னு திட்டுறா . ஹ்ம்ம். பார்க்கலாம் சீக்கிரமே நானும் ஒரு ப்ளாக் எழுத்தாளரா வளர்ந்து வரணும்னு எல்லோரும்  ஆண்டவன வேண்டிக்கோங்க .

Saturday, August 14, 2010

My first Post

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ்
என சங்கே முழங்கு