Pages

Wednesday, August 25, 2010

Thozhiyin Kavidhai

காதல் என்பது என்ன? 
யாரேனும் எனக்கு உரைக்க வேண்டும்.
இன்றைய இளைய தலைமுறை தரும்  விளக்கம் 
என்னவென்பது எனக்கும் தெரியும்....

காதல் என்றால் கல்யாணம் செய்து கொள்வதாம் 
என் பக்கத்து வீட்டு  குட்டி பாப்பா சொல்கிறாள் 
அவள் வயதோ ஆறு

காதல் என்று சொன்னால் சிலர் கோபிக்கிறார்கள் 
சிலர் சினுங்குகிரார்கள் ....சிலர் சொக்கி நிற்கிறார்கள்....
இன்னும் சிலர் "ஹும் " என்கிறார்கள்....
ஆனால் யாரும் அதன் அர்த்தத்தை சொன்ன பாடில்லை...

காதல் என்றால் அன்பு - அன்பு மட்டுமே....
நம் அன்னை நம் மீது வைப்பது காதல்...
அவள் தன் குழந்தையிடம் காட்டுவது அன்பென்றால்..
அதுவும் காதலே...

பெற்றவள் நம் மீது வைக்கும் காதல் 
ஆயுள் முழுவதும் நீண்டிருக்க... உயிரோடு இருக்க..
ஏன் சில காதல்  இடையில்  இறந்து போகின்றன? 

ஏனென்றால் அங்கே காதல் இல்லை...
கவர்ச்சி, பிடிவாதம், ஆசை, மட்டுமே இருக்கின்றன 
இவற்றுள் ஏதேனும் ஒன்று போனாலும் மொத்த காதலும் போய்விடுகிறது!!!!!
ஒருவர் மீது அன்பு வைப்பது அத்தனை சுலபமான விஷயம் 
அல்ல ......................

நான் ஆசை படுவதை நீ செயல் படுத்தினால் - பதிலுக்கு
நான் உன் மீது காட்டுவது அன்பல்ல....

நான் ஆசை படுவதை நீ செய்யா விட்டாலும் அப்போதும் 
நான் உன் மீது காட்டுவது தான் அன்பு....
எதிர்பார்ப்பு இல்லாத அன்பு...
இறைவன் நம் மீது வைக்கின்ற அன்பு...

உன்னை , உன் குறைகளை (குறை என்று நீ நினைப்பவற்றை ) 
அப்படியே ஏற்றுக்கொண்டு உன்னை ஆராதிக்க 
ஓர் உயிர் இருந்துவிட்டால் உலகில் அந்த மனிதனை விட 
பாக்கியசாலி வேறு ஒருவரும் இல்லை....

"நீ நீயாகவே இருக்கலாம்...உன் மனசாட்சி படி 
நடக்கலாம் ....அது எனக்கு எதிராகவே இருந்தாலும்
உன் மீது நான் கொண்டிருக்கும் அன்பு மாறாது..."
இப்படி ஓர் அன்பு மனம் அது தாயாகவோ , தந்தையாகவோ 
சகோதரனாகவோ கணவனாகவோ இருக்கலாமே...

இதுவே தூய்மையான  அன்பு....உன்னிடம் 
எதையும் எதிர்பார்க்காத அன்பு ....பேரம் பேசாத அன்பு...
உயிர்களின் துன்பம் களையும் அன்பு ....

இந்த அன்பை நான் பிறரிடம் காட்ட  எனக்கு
அருள் செய்வாய் இறைவா....

No comments:

Post a Comment