“பிரிந்து விடு! பிரிந்து விடு!”
என்று வார்த்தைகளில் சொல்லிவிட்டு
ஒற்றைப் பார்வையில் உயிர் போகக் கெஞ்சுகிறாளே
இவளை விட்டு எப்படிப் பிரிய? மறந்து விடு ! மறந்து விடு! என்று கூறிவிட்டு என் மனதை விட்டு பிரிய மறுக்கிறாளே என்ன செய்ய?? பிரிவதும் மறப்பதும் எளிதென்றால்இவ்வுலகில் அன்னையின் அன்பென்ற ஒன்றே இல்லாது போயிருக்குமே!!! அவளை பிரிவதும் மறப்பதும் தான் வாழ்க்கை என்றால் அப்பிறப்பு எனக்கு இல்லாது போகட்டுமே.....
Wednesday, September 22, 2010
Friday, September 17, 2010
Thozhiyin thatha........ illai thathavin thozhiiiiiiiii
அவர் ஊரில் எல்லோராலும் மதிக்கப்பட்டவர் .....
அவரா அப்படி ஒரு மனிதன் இருக்க முடியுமா ?
அப்பா என்ன பேச்சு ! என்ன வேகம் ! என்ன கோபம் !
வெட்டு ஒன்று துண்டு ரெண்டு !!!
விசுவாசம் என்றால் மரியாதையை என்றால் என்னவென்று
அவரிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் !!
அவரது 47 ஆவது வயதில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை
அவருக்கு வாழ்கையி l எல்லாமுமாய் ஒருத்தி வந்தால்
எல்லாமே அவள் தான்
அவள் சிரிக்க அவர் சிரிப்பார்
அவள் முகம் சுருங்கினால் துடித்து போவார்
அவள் எங்கே எப்போது கூப்பிட்டாலும் ஆனந்தமாய் அழைத்து செல்வார்
அவளே உலகம் ! அவளே சகலமும் !
உடல் .. பொருள் .. ஆவி .........
எல்லாமும் அவள் ஒருத்திக்காக ...
அவளுக்கும் அவர் மட்டுமே போதும்
வேறு எவரும் வேண்டாம்
அவள் கண்கலங்கினால் 'நான் இருக்கிறேனடி ! அழாதே ' என்பார்
ஆனாலும் விதி என்று ஒன்று இருப்பதை அவர்கள் மறந்து விட்டார்கள் போலும் !
ஊர் கண் பட்டதோ ! வேறு யார் கண் பட்டதோ !
விதி செய்த சதியோ !!!
அவள் மீது வாரி வாரி அன்பை வழங்கியவரை
காலன் வாரி கொண்டு போய்விட்டான் !
அவரோடு அவள் வாழ்ந்தது ஏழே ஆண்டுகள்
ஆனாலும் ஏழு பிறவிகளில் அவளுக்கும் கிடைக்கும்
அன்பை ஏழு ஆண்டுகளில் பொழிந்து விட்டு போய்விட்டார்
அவர் உடல் மண்ணைவிட்டு மறைந்தது எல்லோருக்குமே
இழப்புதான் ... ஆனாலும் அது வழக்கம் போல் மறக்கப்பட்டு விட்டது
அவளுக்கோ இது சாதாரண இழப்பு அல்லவே ... பேரிழப்பாயிற்றே...
எத்தனை விலை கொடுத்தாலும் திரும்ப பெற முடியாத இழப்பாயிற்றே ...
அவரோடு வாழ்ந்த காலத்தின் நினைவுகளோடு இன்று அவள்
உலகில் வாழ்கிறாள் ..... அவரது புகழை காக்கும் அடுத்த வாரிசாக ...
ஆம் .. அந்த ஒருத்தி .... நான் தான் .
அவரது வாழ்கையை அர்த்தமுள்ளதாய் மாற்றியவள் நான் .....
அவர் என்னுடைய 'தாத்தா 'திரு . C.SWARNALINGAM zoology teacher for +2.....
அவர் இறந்தபோது எனக்கு வயது ஏழு .............
Wednesday, September 15, 2010
Muga naga natpathu natpandru...........
நட்பு...
அழகான வார்த்தை.
மொழியை மட்டும்
படிக்கத் தெரிந்தவர்களுக்கு...
ஆழமான வாழ்க்கை
உள்ளத்தை படித்தவர்களுக்கு...l
*****************************************
கண்கள் இல்லையென்பது
காதலுக்கு மட்டுமில்லை..
ஆண் பெண் வேறுபாடுபாரா
நட்புக்கும் தான்...
*****************************************
நட்பு...
நெஞ்சில் வைத்துள்ள போதும்
சுவாசமாய் வாசம் வீசும்
தூக்கி எறிந்தும் புன்னகை வீசும்.
சிறு புன்னகையில் பூத்து
தோளோடு தோள் கொடுத்து
மூன்றாம் கையாய் நம்பிக்கை தந்து
என்றும் உயிருள்ள நிழலாய்
நம்மோடு துணை நின்று...
வாடாத குறிஞ்சி மலர்..
*****************************************
விட்டுப் போன மனங்களால்
பட்டுப் போன இதயத்தில்,
தொட்டுப் போக ஜீவன்கள் வந்ததும்
மீண்டும் துளிர் விட்டு
புது உலகை எட்டிப் பார்க்கும்
விந்தை என்ன?
என் உடனாக வந்து
உருவமாக விழியில் விழுந்து
உணர்வாக உயர்ந்து - இன்று
உயிராக ஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த உள்ளங்கள் - என்
நிழலில் இருந்து
சில உருவங்களாய் பிரிந்து
என்னுடன் வாழ்வதென்ன?
இவர்களின்
மாறாத அன்பும்,
தேயாத புன்னகையும்,
கலையாத நினைவுகளும்,
என்னுடல் மண்ணிலே புதையும் வரை
நெஞ்சினில் துடித்திட
வரம் கொடு இறைவா....
அழகான வார்த்தை.
மொழியை மட்டும்
படிக்கத் தெரிந்தவர்களுக்கு...
ஆழமான வாழ்க்கை
உள்ளத்தை படித்தவர்களுக்கு...l
*****************************************
கண்கள் இல்லையென்பது
காதலுக்கு மட்டுமில்லை..
ஆண் பெண் வேறுபாடுபாரா
நட்புக்கும் தான்...
*****************************************
நட்பு...
நெஞ்சில் வைத்துள்ள போதும்
சுவாசமாய் வாசம் வீசும்
தூக்கி எறிந்தும் புன்னகை வீசும்.
சிறு புன்னகையில் பூத்து
தோளோடு தோள் கொடுத்து
மூன்றாம் கையாய் நம்பிக்கை தந்து
என்றும் உயிருள்ள நிழலாய்
நம்மோடு துணை நின்று...
வாடாத குறிஞ்சி மலர்..
*****************************************
விட்டுப் போன மனங்களால்
பட்டுப் போன இதயத்தில்,
தொட்டுப் போக ஜீவன்கள் வந்ததும்
மீண்டும் துளிர் விட்டு
புது உலகை எட்டிப் பார்க்கும்
விந்தை என்ன?
என் உடனாக வந்து
உருவமாக விழியில் விழுந்து
உணர்வாக உயர்ந்து - இன்று
உயிராக ஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த உள்ளங்கள் - என்
நிழலில் இருந்து
சில உருவங்களாய் பிரிந்து
என்னுடன் வாழ்வதென்ன?
இவர்களின்
மாறாத அன்பும்,
தேயாத புன்னகையும்,
கலையாத நினைவுகளும்,
என்னுடல் மண்ணிலே புதையும் வரை
நெஞ்சினில் துடித்திட
வரம் கொடு இறைவா....
Saturday, September 11, 2010
Just for Joke only ( Thirumanathirku Munbum Pinbum)
| (தி.மு) திருமணத்திற்கு முன் : (நிச்சய தார்த்தம் முடிந்தவுடன்) கீழே படியுங்கள் அவன் :ஆமாம்,இதற்காகத்தானே நான் இத்தனை நாளாய்க் காத்திருந்தேன் அவள் :நீ என்னை விட்டு விலக நினைப்பாயா ? அவன் :இல்லை,இல்லை ,நான் கனவிலும் அதை நினைத்ததில்லை அவள் :நீ என்னை விரும்புகிறாயா ? அவன் :ஆமாம்,இன்றும்,என்றென்றும் அவள் :என்னை ஏமாற்றிவிடுவாயா ? அவன் :அதைவிட நான் இறப்பதே மேல் அவள் :எனக்கொரு முத்தம் தருவாயா ? அவன் :கண்டிப்பாக,அதுதானே எனக்கு மிகப் பெரிய சந்தோச தருணம் அவள் :என்னை திட்டுவாயா ? அவன் :ஒருபோதும் இல்லை.அப்படிச் செய்வேன் என்று நினைத்தாயா ? அவள் : நீ என்னுடன் கடைசிவரை கைகோர்த்து வருவாயா ? (தி.பி) திருமணத்திற்குப் பின் : கீழிருந்து மேலே படியுங்கள் |
Sunday, September 5, 2010
Try to Change the life......
என்னடா வாழ்க்கை இது . தினமும் எழுந்திரிக்கிறோம் தினமும் குளிக்கிறோம் தினமும் பல் விளக்குறோம் தினமும் சாப்பிடுறோம் தினமும் வேலை செய்யுறோம் தினமும் குடும்பத்த கவனிக்கிறோம் . என்ன வித்தியாசம் இருக்கு நம்மோட தினசரி வாழ்க்கைல. இப்படியே போனா எப்படி நாம ஒரு காந்தி யாவோ இல்ல புத்தரவோ ஆகுறது. அதுக்காக கொஞ்சமாவது நம்முடைய வாழ்க்கை நடைமுறை கள மாற்ற வேண்டாமா ? சராசரி மனித வாழ்க்கைல சுமாரா பாதிய கழிச்சாச்சு. இனிமேலாவது கொஞ்சம் மாறனும். அதுக்கான தைரியத்த காலம் நமக்கு கொடுக்கணும். யோசிப்போம் .......
Subscribe to:
Posts (Atom)