Pages

Friday, September 17, 2010

Thozhiyin thatha........ illai thathavin thozhiiiiiiiii


அவர்   ஊரில்   எல்லோராலும்  மதிக்கப்பட்டவர்  .....  

அவரா அப்படி  ஒரு  மனிதன்  இருக்க  முடியுமா ?

அப்பா  என்ன  பேச்சு ! என்ன  வேகம் ! என்ன  கோபம் !

வெட்டு  ஒன்று  துண்டு  ரெண்டு !!!

விசுவாசம்  என்றால்  மரியாதையை  என்றால்  என்னவென்று 

அவரிடம்  தான்  கற்றுக்கொள்ளவேண்டும் !!

அவரது  47 ஆவது வயதில்  வாழ்க்கையில்  ஒரு  திருப்புமுனை 

அவருக்கு  வாழ்கையி l எல்லாமுமாய்  ஒருத்தி  வந்தால் 

எல்லாமே  அவள்  தான் 

அவள்  சிரிக்க  அவர்  சிரிப்பார் 

அவள்  முகம்  சுருங்கினால்  துடித்து  போவார் 

அவள் எங்கே  எப்போது  கூப்பிட்டாலும் ஆனந்தமாய்  அழைத்து  செல்வார் 

அவளே  உலகம் ! அவளே  சகலமும் !

உடல் .. பொருள் .. ஆவி .........

எல்லாமும்  அவள்  ஒருத்திக்காக ...

அவளுக்கும்  அவர்  மட்டுமே  போதும் 

வேறு  எவரும்  வேண்டாம் 

அவள்  கண்கலங்கினால்  'நான்  இருக்கிறேனடி ! அழாதே ' என்பார் 



ஆனாலும்  விதி என்று  ஒன்று  இருப்பதை  அவர்கள்  மறந்து  விட்டார்கள்  போலும் !

ஊர்  கண்  பட்டதோ ! வேறு  யார்  கண்  பட்டதோ !

விதி  செய்த  சதியோ !!!

அவள்  மீது  வாரி  வாரி  அன்பை  வழங்கியவரை 

காலன்  வாரி  கொண்டு  போய்விட்டான் !

அவரோடு  அவள்  வாழ்ந்தது  ஏழே  ஆண்டுகள் 

ஆனாலும்  ஏழு  பிறவிகளில்  அவளுக்கும்  கிடைக்கும் 

அன்பை  ஏழு  ஆண்டுகளில்  பொழிந்து  விட்டு   போய்விட்டார் 

அவர்  உடல்  மண்ணைவிட்டு  மறைந்தது  எல்லோருக்குமே 

இழப்புதான் ... ஆனாலும்  அது  வழக்கம்  போல்  மறக்கப்பட்டு  விட்டது 

அவளுக்கோ  இது சாதாரண  இழப்பு  அல்லவே ... பேரிழப்பாயிற்றே...

எத்தனை விலை  கொடுத்தாலும்  திரும்ப  பெற  முடியாத  இழப்பாயிற்றே ...

அவரோடு  வாழ்ந்த  காலத்தின்  நினைவுகளோடு  இன்று  அவள் 

உலகில்  வாழ்கிறாள் ..... அவரது  புகழை  காக்கும்  அடுத்த  வாரிசாக ...

ஆம் .. அந்த  ஒருத்தி .... நான்  தான் .

அவரது  வாழ்கையை  அர்த்தமுள்ளதாய்  மாற்றியவள்  நான் .....

அவர்  என்னுடைய  'தாத்தா 'திரு . C.SWARNALINGAM zoology teacher for +2.....

அவர்  இறந்தபோது  எனக்கு  வயது  ஏழு .............

2 comments:

  1. unmaila en kavidhai nan ezhuthi...aachariyama iruku....naana ipdi ezhuthinen????? yedhedho ninaivugal thirumbavum varudhu....sandhoshama thukkama...en kirukalgaluku....ipdi oru varaverpu kudutha ungaluku nan epdi nanri solradhunu theriyla....Neengalum unga kudumbamum ella selvamum pugazhum adaiyanum nu manadaaara iraivanai prarthikren...Nanri...

    anbudan,
    Bhuvana

    ReplyDelete
  2. Aacharyam, athirchi, santhosam, thukkam, eatram, erakkam ellame nirainthathuthaan vazhkai bhuvana. Ippo ithu unnudaya Lucky time bhuvana.... U deserve for that too.. so, run along with the life and have all your sucess....... and i am really happy on having you as one of my best friends.

    ReplyDelete