Pages

Wednesday, September 15, 2010

Muga naga natpathu natpandru...........

நட்பு...
அழகான வார்த்தை.
மொழியை மட்டும்
படிக்கத் தெரிந்தவர்களுக்கு...
ஆழமான வாழ்க்கை
உள்ளத்தை படித்தவர்களுக்கு...l


*****************************************
கண்கள் இல்லையென்பது
காதலுக்கு மட்டுமில்லை..
ஆண் பெண் வேறுபாடுபாரா
நட்புக்கும் தான்...
*****************************************


நட்பு...
நெஞ்சில் வைத்துள்ள போதும்
சுவாசமாய் வாசம் வீசும்
தூக்கி எறிந்தும் புன்னகை வீசும்.
சிறு புன்னகையில் பூத்து
தோளோடு தோள் கொடுத்து
மூன்றாம் கையாய் நம்பிக்கை தந்து
என்றும் உயிருள்ள நிழலாய்
நம்மோடு துணை நின்று...
வாடாத குறிஞ்சி மலர்..

*****************************************


விட்டுப் போன மனங்களால்
பட்டுப் போன இதயத்தில்,
தொட்டுப் போக ஜீவன்கள் வந்ததும்
மீண்டும் துளிர் விட்டு
புது உலகை எட்டிப் பார்க்கும்
விந்தை என்ன?
என் உடனாக வந்து
உருவமாக விழியில் விழுந்து
உணர்வாக உயர்ந்து - இன்று
உயிராக ஒட்டிக்கொண்டிருக்கும்
இந்த உள்ளங்கள் - என்
நிழலில் இருந்து
சில உருவங்களாய் பிரிந்து
என்னுடன் வாழ்வதென்ன?
இவர்களின்
மாறாத அன்பும்,
தேயாத புன்னகையும்,
கலையாத நினைவுகளும்,
என்னுடல் மண்ணிலே புதையும் வரை
நெஞ்சினில் துடித்திட
வரம் கொடு இறைவா....

3 comments:

  1. Eshwara.!!!!!!! Idhu neengale Ezhuthinadhaa???????????????????????????????? yar ezhuthirundhalum ROMBA romba azhaga iruku.....
    கண்கள் இல்லையென்பது
    காதலுக்கு மட்டுமில்லை..
    ஆண் பெண் வேறுபாடுபாரா
    நட்புக்கும் தான்...
    Idhu romba correct.... nalla varigal.

    ReplyDelete
  2. enna pathi therinjum nee intha kelvi ketturukka koodathu. Sathyama ithu unna mathiriye oru thozhi koduthathu thaan ithuvum.

    ReplyDelete